
வெளிநடுகளில் வேலை செய்பவர்களுக்கு தெரியும் இதன் முக்கியதுவம்,தனது காதலியின் குரலை நாள்முலுவதும் கேட்டுகொண்டு இருக்கவும், தனது குடும்பத்தாருடன் பேசவும் பெரும் உதவியாக இருப்பது இந்த ஸ்கைப் தான். இதனாலேயே 5பில்லியன் வாடிக்கையளர்களை தன்வசம் வைத்துள்ளது.
இப்படி பெரும் சேவையை செய்துவரும் ஸ்கைப் நேற்று இரவு(22/12/2010) முதல் உலகம் முளுவதும் ஸ்கைப் சேவை தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் ஸ்கைப்பினுள் நுழையமுடியாமல் தவித்தனர்.
இதனை உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு பாவனையாளர்கள் தற்போது எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றனர்.
( இச்செய்தி எழுதப்படும் வரை)
இது தொடர்பாக ஸ்கைப் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் தொழில்நுட்பக் கோளாறு இடம்பெற்றுள்ளதாகவும் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் அதனை சரி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்கைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது
.
0 comments:
Post a Comment