சில நேரங்களில் சில மாற்றங்கள் என்பார்கள் இன்டர்நெட் பாவனையாளர்களுக்கு சில நேரங்களில் சில ஏமாற்றங்கள். இன்டர்நெட் உலா வந்துகொண்டு இருப்பார்கள் திடீர் என சில பக்கங்கள் திறக்காமல் இலக்கங்களுடன் error message தோன்றும். இதற்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் இருக்கும்.அப்படி தோன்றும் சில error இலக்கங்களும் அதற்கான விளக்கங்களும் கிழே தந்துள்ளேன், இது உங்களுக்கு பயன்னுள்ளதாக அமையும் என நம்புகிறேன்..
400 - bad request error எனப்படும், அதாவது நீங்கள் தவறான url முகவரி கொடுத்தால் அல்லது sever க்கு புரியாத url முகவரி கொடுத்தால் இந்த error தோன்றும்.
401 - உங்களுக்கு அனுமதி தராத பக்கங்களை திறக்க முயலும் போது இந்த error தோன்றும் . username மற்றும் password சரிபார்க்கும் படி கட்டளையிடும்
402 - Payment Required Error , credit card மூலம் online இல் வாங்கும் போது
பிழையான தகவல் கொடுத்தால் தோன்றும் error
403 - நீங்கள் தடை செய்யப்பட்ட அல்லது block செய்யப்பட்ட வலை பக்கங்களை முயற்சிக்கும் போது இந்த error தோன்றும்.
404 - பெயர் மாற்றப்பட்ட அல்லது வலைபக்கத்தில் இருந்து அகற்றப்பட்ட வலைபக்கங்களை திறக்க முயலும் போது இவ்வகையான error தோன்றும்.
408 - time out error.நீங்கள் வழங்கிய வலைப்பக்க முகவரி தனது sever இல் இருந்து மறுமொழி வரும் நேரம் அதிகரித்தால் இவ்வகையான error தோன்றும்.
2 comments:
பயணுள்ள தகவல்......
sir romba supera irukku
Post a Comment